Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாய்மைக்கு எடுத்துக்காட்டு” ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டியுள்ள அன்புகாட்டும் சம்பவம் தாய்மையை உணர்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவர் நாய்க்குட்டி ஒன்றை  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதேபோல ஆட்டுக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளது. இதனால் குட்டி உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைசாமி வளர்க்கும் நாய் தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து வருகின்றது.

இந்த சம்பவத்தை பார்த்த எழுத்தாளர் ஒருவர் வீடியோ எடுத்து அதை தன்னுடைய சமூக வலைத்தள பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது. இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், “ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்ததை முதலில் நாங்கள் பார்த்தோம்.ஆனால்  ஆட்டுக்குட்டியை நாய் கடித்து விடுமோ? என்று நாங்கள் பயந்தோம். ஆனால் நாய் அவ்வாறு செய்யவில்லை. ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் ஒத்துக்கொள்ளுமா என்றெல்லாம் யோசித்தோம்.

ஆனால் அந்த ஆட்டுக்குட்டியை தன் பிள்ளை போல நாய் அரவணைத்து அன்பு காட்டி பால் கொடுக்கிறது. இது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து எழுத்தாளர் சோழச்சி கூறுகையில், “ஒரு தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் ஐந்தறிவுள்ள ஒரு நாய் குட்டி ஆட்டுக்குட்டியை தனது குழந்தையாக அரவணைத்து பால் கொடுப்பது மனித நேயத்தையும், தூய்மையையும் உணர்த்தியிருக்கிறது. இது போல மக்களும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |