பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரம்யாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்தார் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோ வில் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க காதலே காதலே பின்னணி பாடலுடன் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் . தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பாலா சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பிக்பாஸ் அவரை பிரீஸ் செய்கிறார் . அப்போது அங்கு வந்த ஆரி பாலாவின் கன்னத்தைக் கிள்ளி தலையை கோதி விட்டு செல்கிறார் .
#Day87 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MhI4T232bf
— Vijay Television (@vijaytelevision) December 30, 2020
பின்னர் ஆரியை ரீவைன் செய்ய சொல்கிறார் பிக்பாஸ் . மீண்டும் வந்து பாலாவின் கன்னத்தை கிள்ளும் நொடியில் ஆரி பிரீஸ் என்கிறார் பிக்பாஸ் . இதனை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா ‘சண்டக்கோழிங்க ரெண்டு கொஞ்சிகிட்டு இருக்காங்க, எனக்கு இது பார்க்க பிடிக்கல’ என கலாய்க்கிறார். ‘விக்ரம் வேதா’ பின்னணி இசையுடன் வந்த இந்த புரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.