Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ரஜினி ஒரு கண், மோடி ஒரு கண் – அர்ஜுன் மூர்த்தி பேட்டி…!!

மோடி ஒரு கண் ரஜினி ஒரு கண் என்று அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து அவருடைய இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற இடத்தில் ரஜினிக்கு மாற்றம் இல்லை.

ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே அவர் கட்சி தொடங்க போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். தமிழக மக்களுக்காக எதுவும் தன்னால் செய்ய முடியவில்லையே என்று மன உளைச்சலில் அவர் இப்போது இருக்கிறார். வீட்டில் உள்ள ஒருவரைப் போன்று ரஜினியை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணத்தை மதித்து நான் அவருடன் செயல்படுவேன். மோடி எனக்கு ஒரு கண் என்றால் ரஜினி ஒரு கண். இருவரும் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |