Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் அனிதா தந்தை மரணம்… இறுதி மரியாதை செலுத்திய அர்ச்சனா , நிஷா…!!!

பிக்பாஸ் அனிதாவின் தந்தைக்கு அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4-வது சீசனில் கலந்துகொண்டு கடந்த வாரம் வெளியேறியவர் அனிதா சம்பத் ‌. நேற்று  அனிதாவின் தந்தையும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் காலமானார். அனிதாவிற்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ச்சனா, நிஷா ஆகிய இருவரும் அனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர் .

அங்கு அனிதாவின் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு அவர்களிருவரும் அனிதாவிற்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல நேரங்களில் அர்ச்சனா மற்றும் நிஷா ஆகியோர் அனிதாவுடன் சண்டை போட்டிருந்தாலும் வெளி உலகில் மனிதத் தன்மையுடன் உண்மையான அன்புடன் நடந்து கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |