Categories
தேசிய செய்திகள்

ரூ. 6,00,000… “கொரோனா பரிசோதனை எனக்கூறி…” பெண்ணிடம் ஆட்டையைப் போட்ட இங்கிலாந்து இளைஞர்..!!

கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியதாக செல்போனில் அழைத்து அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் சோதனைக்கு செலுத்த இந்தியா பணம் இல்லை என்றும், அந்தப் பெண்ணிடம் பணம் அனுப்பும் படியும் கேட்டுள்ளார்.

இதனை நம்பி அந்தப் பெண்ணும் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். 6 லட்சம் பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் வேறு காரணத்தை கூறி 3.5 லட்சத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தேசியமயமாக்கப்பட்ட 2 வங்கிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதன் விவரங்களை கேட்டுள்ளார். மேலும் வங்கி கணக்குகளை முடக்க முடியும் நாட்டின் எந்த பகுதியில் இருந்து பணம் எடுக்கிறார் என்பது தெரிய வேண்டும் எனவும் வங்கிகளிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |