Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அச்சமூட்டும் பம்பர் கம்பிகள்” மோட்டார் வாகனச் சட்ட விதிமீறல்… பெருத்திருந்த அவ்ளோதான்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, லோடு ஆட்டோ, லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்களில் விபத்து ஏற்படும் போது உண்டாகும் சேதத்தை தடுக்கும் பொருட்டு அதன் முகப்பில் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவ்வாறு பொருத்தப்படும் பம்பர் கம்பிகள் சாலையில் நடக்கும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் பம்பர் கம்பிகளை வாகனத்தில் பொருத்துவது மோட்டார் வாகனச் சட்ட விதிமீறலின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே பம்பர் கம்பிகளை பொருத்தி இருக்கும் அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு பயணிக்குமாறும் இதனை மீறும் வாகனங்களின் மீது காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |