தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களிடம் CASH இருக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு தற்போது வரை வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்களிடம் CASH இருக்க வேண்டும். மாணவர்களிடம் KASH இருக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மாணவர்களிடம் knowledge, attitude, skills, habits இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட சிறப்பானது. நீட் தேர்வில் 98 சதவீதம் கேள்விகள் இதிலிருந்துதான் வந்தன என அவர் கூறியுள்ளார்.