ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தற்போது பரவிவரும் புதிய பாதிக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது
இதனையடுத்து ஏற்கனவே கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தற்போது பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளை 28 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைத்து இங்கிலாந்தின் பப்ளிக் ஹெல்த் என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு கொரோனா அறி குறிகளுக்கும் எந்த ஒரு வேறுபாடுகள் தென் படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.