நம் வாழ்க்கையில் இன்றியமையாத நீரை அதிக அளவு குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் நீர் மிகவும் இன்றியமையாதது. ஆனால் உண்மையில் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது, குறைவாக நீர் அருந்துவது இரண்டுமே தவறு தான். மேலும் ஒருவருக்கு எவ்வளவு நீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். அப்படி எனில் சரியான அளவு தான் என்ன? இதற்கு உடலின் மொழியை நாம் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் தாகம் மூலம் உடல் நீர் கேட்கிறதோ, அப்போது நீர் அருந்த வேண்டும். தண்ணீரை பல்லில் படாமல் தூக்கி குடித்து, மடக் மடக் என்று விழுங்குவது தவறு. உயிருக்கு ஆதாரமான நீரை வாய் வைத்து சுவைத்து, சிறிது சிறிதாக அருந்துவதே சிறந்தது.
இதனையடுத்து கொரோணா பாதிக்காமல் தடுக்க நினைத்து, தினசரி 5 லிட்டர் தண்ணீர் குடித்த நபர் பிரிட்டனில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்தால், சோடியத்தின் அளவு குறைந்து அவரது உடல்நிலை மோசமானது. அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவதால் மூளை வீக்கம் ஆபத்து உள்ளதாகவும், சிறுநீரக பாதிப்பு, உடல் சோர்வு, மூட்டு வலி, முதுகுவலி மற்றும் ஜீரண கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.