Categories
உலக செய்திகள்

சுரங்க பாதை அமைத்து…. காதலில் ஈடுபட்டு வந்த மனைவி… கணவர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு  பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். குழப்பமடைந்த ஜார்ஜ் சோபா செட்டை நகர்த்தி பார்த்துள்ளார். அங்கே ஒரு பெரிய பள்ளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பள்ளத்தில் இறங்கி பார்த்த ஜார்ஜ் சுரங்கப்பாதை இருப்பதை கண்டறிந்தார். அந்த சுரங்க பாதையில் சென்று பார்த்தால் அது வேறொரு வீட்டிற்கு சென்றுள்ளது.

அங்கு சென்று பார்த்த போது தன் வீட்டிலிருந்த அதே நபர் அந்த வீட்டில் இருப்பதை பார்த்த பிறகுதான் ஜார்ஜிற்கு  உண்மை தெரியவந்துள்ளது. ஜார்ஜ் வீட்டிற்கு சிறிது தூரம் உள்ள ஒரு வீட்டில் அல்பர்டோ என்ற நபர் இருந்துள்ளார். அவருக்கும் ஜார்ஜின் மனைவிக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஜார்ஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் பமீலாவை, அல்பர்டோ சந்திப்பதற்காக இரண்டு வீட்டிற்கும் இடையே சுரங்கப்பாதை அமைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜார்ஜ், அல்பர்டோவிடம்  சண்டையிட்டுள்ளார். இவர்களது சண்டையை காவல்துறையினர் தீர்த்து வைத்துள்ளனர். மேலும் அல்பர்டோ கட்டிட பணியாளர் என்பதால் சுரங்கப்பாதையை மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |