Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் வெறியுடன் கையில் ஈட்டியுடன் விக்ரம்பிரபு… முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அதிரடியான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் முத்தையா . இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் ,தேவராட்டம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் ,நடிகை லட்சுமி மேனனும் நடித்துள்ளனர் . இந்தப் படத்தின் தலைப்பு முதலில் ‘பேச்சி’ என வைக்கப்பட்டு பின்பு ‘புலிக்குத்தி பாண்டி’ என மாற்றப்பட்டுள்ளது.

இந்தப்படம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கண்ணில் வெறியுடனும் கையில் ஈட்டியுடனும் மிரட்டலான போஸில் விக்ரம்பிரபு இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது . இந்த படத்தை வருகிற பொங்கல் தினத்தில் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர் . இதற்கு முன்பு ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற படமும் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |