Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம ஊர் பொங்கல்….பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்…!!!

தமிழகத்தில் பாஜக சார்பில் வரும் பொங்கலை முன்னிட்டு “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்படும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். வருகின்ற 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக களப்பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைப்பதற்கு முன் நின்று பணிகளை செய்ய வேண்டும். மாநில மாநாடு இதனை கண்காணிக்க நிர்வாகிகளை நியமிக்கவும், தொகுதி மாநாடு என மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை தெளிவுபடுத்த வேண்டும், என்று அவர் பேசினார்.

Categories

Tech |