தமிழகத்தில் அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவை பாஜக உடைக்க நினைப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது. எந்த ஒரு தொண்டரையும் தொடமுடியாது என்று முதல்வர் பழனிசாமி சூளுரைத்துள்ளார். மேலும் நான் உழைப்பால் உயர்ந்தவர், ஸ்டாலின் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தவர் என்ற விமர்சனம் செய்த அவர், அதிமுக தெய்வ சக்தி படைத்த இயக்கம், தெய்வத்தின் அருள் பெற்ற இயக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.