ஒரு நாளைக்கு தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு தண்ணீர் அபாயம் ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் தண்ணீர் குடித்தால் கொரோனா அறிகுறிகளை குணப்படுத்தும் என ஐந்து லிட்டர் தண்ணீரை தினமும் குடித்த நபர் உயிர் இழக்கும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். வானிலை, உணவு, வெப்பநிலை சுற்றுச்சூழல் ஆகியவற்றை பொருத்து இதை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யலாம்.
இங்கிலாந்து நாட்டின் என்ற பேட்ச்வே நகரத்தை சேர்ந்த லோக் வில்லியம்சன் என்பவர் ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடித்து வந்துள்ளார். 37 வயதான அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து பின்னர் மருத்துவரிடம் சென்றார் 2 லிட்டர் தண்ணீர் மட்டுமே அவர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் வேகமாக கொரோனா குணமாக வேண்டும் என ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளார். இதன் விளைவாக அவர்களுக்கு சோடியம் அளவு ஆபத்தான அளவில் குறைந்து அவர் ஒருநாள் மயங்கி விழுந்தார்.
விரைவாக ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 20 நிமிடத்திற்கு மேலாக அவர் பதில் அளிக்காமல் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் மூன்று நாட்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்தார் மருத்துவமனை ஊழியர்கள் சில சோதனை செய்து அவரை சரி செய்தனர் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பினார்.