கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக என்றும், நீங்கள் (தமிழக மக்கள்) நிராகரித்தலும் பா.ஜ.க தங்களது கடமையை செய்யும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நிதின் கட்கரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எனக் கூறி, தற்போதைய சூழ்நிலையில் கிருஷ்ணா – கோதாவரி இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்றும் பதிவிட்டுள்ளார்.
Hearty thanks @nitin_gadkari ji for the announcement to link Godavari and Krishna. This project is very crucial at the moment, as it can widely resolve the water scarcity in Tamil Nadu.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 26, 2019