வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். எல்லா வியாபாரம், தனிநபர்கள் ஒவ்வொருவரும் வரி ஏதும் கடன் வாங்கி உள்ளார்களா அல்லது வரி செலுத்த தகுதி உள்ளவர்கள் என்பதை தீர்மானிக்க ஒரு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில் நாடு முழுவதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர்கொண்ட இடர்பாடுகளை கருத்தில் கொண்டு 2019 – 2020 கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.