விக்ரம் பிரபு நடிக்கும் புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வேற லெவலில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மேலும் இப்படம் வழக்கமான முத்தையா படங்களை போல ஆக்ஷன்கள் நிறைந்த சென்டிமென்ட் படமாக இருக்கும் என்பது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.