நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகி வந்த ‘வக்கீல் சாப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது .
ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி வந்தது .
And it's a wrap for @PawanKalyan on #VakeelSaab sets. We all had a BLAST working with the Power Star 🔥
The POWER will unleash very soon!#SriramVenu @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @BoneyKapoor @MusicThaman pic.twitter.com/M5uOArzIt3— Boney Kapoor (@BoneyKapoor) December 29, 2020
இந்த படத்தில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார் . மேலும் நிவேதா தாமஸ் ,அனன்யா ,அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் நிறைவடைந்துள்ளது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளரகள் போனி கபூர் ,தில் ராஜு ஆகியோர் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.