மகரம் ராசி அன்பர்களே…! உங்களின் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நாளாக இருக்கும்.
சில நபர்கள் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்க கூடும். வேற்று மதத்தினரை நட்பு கிடைக்கும். திட்டங்களால் நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றியை எளிதில் எட்டிப் பிடிப்பீர்கள். உங்களின் செயல்களைக் கண்டு மற்றவர் ஆச்சரியப்படுவார்கள். பார்த்து பொறாமைப் படுவார்கள். அந்தஸ்து உயர்ந்தவர்களின் நட்பு பரிபூரணமாக கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். சில நபரிடம் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது ஆவணம் அவசியம். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கை வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகளை சுமூகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தான வாய்ப்பு கிட்டும் யோகம் இருக்கும். தாய் தந்தையருக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள்.
மாணவ செல்வங்கள் துணிச்சலுடன் எதிலும் காணப்படுவீர்கள். விளையாட்டில் ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.