Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட பின்பும் “கொரோனா வருதாம்”… இது எப்படி..? காரணம் என்ன..?

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்தது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி இங்கிலாந்து அனுமதி அளித்தது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்கா, இங்கிலாந்து அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்தில் புதிய கொரோனாக்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 134 பேர் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்காவில் 3.36 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் மேத்தியூ என்ற 45 வயது செவிலியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டு ஒரு வாரத்திற்குள் அவருக்கு உடல் வலி மற்றும் தலை வலி ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு மீண்டும் தொற்று இருப்பது உறுதியானது. தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றியுள்ளது குறித்து நோய் தொற்று வல்லுனரான கிறிஸ்டியன் ராமெர்ஸ் கூறியதாவது: “தடுப்பூசி போட்டபிறகு அதன் பாதுகாப்பு கிடைப்பதற்கு 10 முதல் 14 நாட்கள் ஆகும். முதல் டோஸ் போட்டபிறகு 50% நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இரண்டாம் டோஸ் போட்டபிறகுதான் 95% நோய் எதிர்ப்பு தன்மை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |