குரூப்-1 தேர்வில் இருந்து சில புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் குரூப்-1 குரூப்-2 , உள்ளிட்ட குரூப் தேர்வுகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் அரசு பணிக்கு செல்கிறார்கள். தற்போது அடுத்த மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
1.அதன்படி ஜனவரி 3ஆம் தேதி 9:15 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்று விட வேண்டும். அதன்பிறகு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2.தேர்விற்கு பென்சில் பயன்படுத்தக்கூடாது.
3.கருப்பு Ballpoint பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.தேர்வு விடைத்தாளில் கைரேகை கட்டாயம்.
5.இரண்டு இடங்களில் கையெழுத்திட வேண்டும்.
6.மொத்த விதைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில் தவறு இருப்பின் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.