ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது.
துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்துள்ளது. தன் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கியதில் இந்த பரிசு விழுந்துள்ளது.
30 வயதான நவ்னீத் சஞ்சீவன் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பஸ்தர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. நான்கு ஆண்டுகளாக அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். வேலையை இழந்து குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த இவருக்கு லாட்டரி டிக்கட் மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது. ஒரு பில்லியன் டாலர் என்றால் இந்திய மதிப்புக்கு 7.5 கோடி ஆகும் அதிர்ஷ்டம் உங்கள் கதவை எப்போதாவதுதான் தட்டும் என்று கூறுவார்கள். தற்போது நவீனுக்கு தற்போது தட்டியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் எனது நண்பர்களுடன் வெளியில் சென்றபோது ஒரு முறை லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தேன். ஊரடங்கு என்பதால் தனக்கு வேலை இழந்து விட்டது. பல்வேறு கம்பெனிக்கு நேர்காணலுக்கு சென்று வந்தேன். ஒரு கம்பெனியின் நேர்காணலுக்கு சென்றிருந்தபோது துபாய் டூட்டி-ஃப்ரீயிடமிருந்து இருந்து அழைப்பு வந்தது. அதை என்னால் நம்பவே முடியாதது. எனக்கு அடித்த அதிர்ஷ்டம் முற்றிலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இப்போது நான் தாயகம் திரும்பபோகிறேன்” என்று மகிழ்ச்சியாக கூறினார்.