Categories
உலக செய்திகள்

என்னோட ரெஸ்டாரன்டில் சாப்பிடுங்க…” ஐ-பேட், கார், பணம் என எக்கச்சக்க பரிசு…” கலக்கும் யூ-டியூபர்..!!

தனது உணவகத்தில் ஆடர் செய்து சாப்பிடுபவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என ஒரு யூடியூபர் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனது உணவகத்தில் சாப்பிடும் மக்களுக்கு ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா முழுவதும் ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த தொடக்கத்தின் அதிரடியாக இங்கு உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட். தனது சேனலில் சனிக்கிழமை அன்று “ஐ ஓபன் ஏ ரெஸ்டாரன்ட் தேட் பே யூ டூ ஈட் அட் இட்” என்ற ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தது.

அதில் வட கரோலினாவில் முதல் இலவச ரெஸ்டாரண்ட் என்ற பெயரையும் அவர் மாற்றி வைத்தார். இதை பார்த்த மக்கள் இங்கே சாப்பிடுவதற்கு வெளியேற்று வரிசை கட்டி நிற்க தொடங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் வரிசையில் நின்றிருந்தனர். வாடிக்கையாளர்கள் ஆடர் செய்யும் பர்கர் மற்றும் பிற உணவுகளுடன் 100 டாலர் பணத்தையும் பரிசுத் தொகையாக வழங்கியதாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு ஐ பாட்டுகள், ஏர்போட் மற்றும் பிற விலை உயர்ந்த பொருள்களை வழங்கியுள்ளார்.

சிலருக்கு தனது விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி உள்ளார். இதை அறிந்த மக்கள் வரிசையாக ரெஸ்டாரன்ட் முன் குவிய தொடங்கினர். மக்கள் கூட்டம் அதிகமானதால் காவல்துறையினர் தலையிட்டு மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர் கடையை மூடப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா முழுவதும் மஸ்டர்பீஸ் பர்கர் உணவகங்களுக்கு தொடங்கப் போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

Categories

Tech |