செல்போனில் உள்ள க்யூஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டாகும். இது உங்கள் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து நிதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு மெல்லிய ரெக்டாங்குலர் பிளாஸ்டிக் கார்டாகும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட்க்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஒரு டெபிட் கார்டை நீங்கள் ஸ்வைப் செய்யும் போது, உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும். அதேசமயம், கிரெடிட் கார்டில், உங்கள் முன் அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து பணம் எடுக்கப்படும்.
இந்நிலையில் செல்போனில் உள்ள க்யூஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி – 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் (e Mandate) வரம்பும் ரூ.5000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிப் பயன்படுத்தி பணம் செலுத்தும் ரூபாய் 2000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.