Categories
உலக செய்திகள்

பல வருடங்களாக கைவரிசை… காட்டி வந்த மர்ம கும்பல் …. அதிரடியாக கைது…!!

தாமிர மின்கம்பிகளை ஒன்றரை வருடங்களாக திருடி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் பவர் கிரிட் என்ற மின்சார நிறுவனத்திற்கு உரிய 92 ஆயிரம் மீட்டர் தாமிர மின் கம்பிகளை சுமார் ஒன்றரை வருடங்களாக 6 பேர் கொண்ட கும்பல் திருடி வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ஆறு நபர்களும் கடந்த 2013 மற்றும் 2014ம் வருடங்களில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் கம்பிகளை திருடியதாக இவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் திருடிய மின்கம்பிகளை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்து வந்துள்ளனர். அதாவது  இவர்கள் 6 பேரும் மேற்கு யார்க்ஷயர் என்ற பகுதியில் நள்ளிரவு நேரங்களில் கிராமப்புறங்களில் தான் அவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல்கள் சேர்ந்து இரு நிறுவனங்களுக்கும் சுமார் 20,000 கிலோ அளவுடைய  தாமிர கம்பிகளை 70 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த கும்பலைச் சேர்ந்த ஜெனி டேவிஸ் என்பவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை, லீ ராபின்சன் என்பவருக்கு இரண்டரை வருடங்களும் மற்றும் டேவிட்சன் என்பவருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் பத்து மாதங்களும் மற்றும் ரிச்சர்ட் ஹார்பர் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் திருடிய பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக மீதமுள்ள இருவரில் ஒருவருக்கு மூன்றரை வருடங்களும் இன்னொருவருக்கு இரண்டரை வருடங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |