Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹீட்டர் போட சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… பார்க்கச் சென்ற கணவருக்கும் நேர்ந்த கொடுமை..!!

மின்சாரம் தாக்கி கணவன் –  மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகிலுள்ள அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜயகுமார்- சசிகலா. விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . இவர்களுக்கு விகாஷ் என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர்.  குழந்தைகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மேலும் விஜயகுமாரும் சசிகலாவும் விழுப்புரத்திற்கு   இன்று செல்ல முடிவு செய்திருந்தனர்.

இச்சூழலில் வீட்டில் உள்ள குளியறையில்  வெந்நீர் போடுவதற்காக அலுமினிய பாத்திரத்தில் வாட்டர்  ஹீட்டரை வைத்துவிட்டு சசிகலா ஸ்விட்சை போட்டுள்ளார். அப்போது அவர் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சசிகலா அலறியுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு  வந்த விஜகுமார் மனைவியை காப்பாற்ற முயன்று போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது . இதனால் சம்பவ இடத்திலேயே கணவன் – மனைவி இருவரும் பரிதாபக உயிரிழந்தனர்.

இதற்கிடையில் சசிகலாவின் சகோதரர் சரவண வடிவேலு சசிகலாவிற்கு போன் செய்துள்ளார். சசிகலா நீண்ட நேரமாக போனை எடுக்காததால் அக்காவை  பார்க்க அவரது வீட்டிற்கு சென்றபோது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |