Categories
தேசிய செய்திகள்

நீங்க கிரெடிட், டெபிட் கார்டு வச்சிருக்கீங்களா… நாளை முதல் செம அறிவிப்பு…!!!

செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தும் வரம்பு நாளை முதல் அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டு. இது நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து விதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் கார்டு. நீங்கள் அதன் மூலம் செலவிடும் பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதே சமயத்தில் கிரெடிட் கார்டில் உங்கள் முன் அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து பணம் எடுக்கப்படும்.

இந்நிலையில் செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ்ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1-ஆம் தேதி முதல் 5000 ரூபாய் வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இ எம் ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் வரம்பும் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வரம்பு 2,000 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |