Categories
மாநில செய்திகள்

தங்க விருது பெற்ற தமிழகம்… “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”…சூப்பர்…!!!

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழக அரசுக்கு  காணொளி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார்.

“டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது” நமது மாநிலம், இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. இவ்விழா காணொலி  மூலம் நடந்தது. ஜனாதிபதி இவ்விருதை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை, “டிஜிட்டல் இந்தியா 2020 வெள்ளி விருது” வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தமிழக அரசு சார்பில் விருதை பெற்றுக் கொண்டார்.

மேலும் இவ்விழாவில் மத்திய தொலை தொடர்பு, மின்னணு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் சட்டம், நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, டெல்லி தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் நீட்டா வர்மா, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் டாக்டர் எம். பாலசுப்பிரமணியன், ஜே. அருண்குமார், டி. ஈஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |