காய்கறி விலை வழக்கத்தை மீறி 50% உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் .
காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கோடை காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் புடலங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் தக்காளி உள்ளிட்ட நாட்டு வகை காய்கறிகளின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒரு கிலோ கணக்கின்படி காய்கறிகளின் விலை தக்காளி ரூ60, பீன்ஸ் ரூ110, இஞ்சி ரூ140, பச்சை மிளகாய் ரூ55, மற்றும் பெரிய வெங்காயம்ரூ18 ஆக உயர்ந்துள்ளது காய்கறிகளின் விலை உயர்வால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.