நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் அஜித்தின் 60வது திரைப்படம் ‘வலிமை’ . இந்தப் படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘வலிமை’ படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதையடுத்து இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது . இந்த படத்தின் அப்டேட்க்காக காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் தொடங்கி விட்டதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார் . இந்நிலையில் வலிமை படத்தில் அஜீத் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் புகைப்படத்தை வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள் . மேலும் ‘வலிமை திருவிழா ஆரம்பம்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர் .