மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வசித்து வரும் தம்பதியினர் விஜயகுமார் – சசிகலா. இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாவர். தொழிலுக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். விஜயகுமார் அம்பத்தூர் பகுதியில் உலா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மனைவி சசிகலா தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை இயக்கியுள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக சசிகலா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவரை காப்பாற்ற முயன்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.