நடிகை நிதி அகர்வால் நடித்துள்ள பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
இந்தி திரையுலகில் ‘மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால் . இதன் பின்னர் கடந்த ஆண்டு தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்தார் . இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக் குவித்தது . இந்த படத்திற்கு பிறகு பிரபலமடைந்த நிதி அகர்வால் தமிழ் திரையுலகில் முதன்முதலாக ‘பூமி’ படத்தில் ஒப்பந்தமானார் .நடிகர் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை லட்சுமண் இயக்கியுள்ளார் .
கடந்த மே மாதமே வெளியாக இருந்த இந்த படம் கொரோனா பரவல் காரணமாக தாமதமானது . இந்நிலையில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு நேரடியாக பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது . இதேபோல் நடிகை நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது . ஒரே நாளில் தான் நடித்த இரண்டு தமிழ் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் நடிகை நிதி அகர்வால் .