Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து கூற, கடற்கரையில் கொண்டாட தடை – காவல் ஆணையர் எச்சரிக்கை…!!

சென்னையில் கடற்கரையில் மக்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி மக்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வருடப்பிறப்பு கொண்டாட்டம் களைகட்டும். மேலும் காவல் ஆணையர் கடற்கரை காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவார். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்கள் 10 மணிக்கு மேல் இருக்க கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இரவில் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சாலைகளில் வாகன பந்தயம் போன்ற  ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக பெண்களிடம் அத்துமீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 10 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 300 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது.

Categories

Tech |