நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள வெப் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் கைவசம் எக்கச்சக்க திரைப்படங்களை வைத்துள்ளார் . விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் விஜய் சேதுபதி அவரது புரோடக்சன் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் . தற்போது விஜய் சேதுபதி அவரது நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் திரைப்படம் குறித்த அறிவிப்பை டுவிட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார் .
Happy to announce @vsp_productions 's maiden One hour web film titled as #Mughizh #முகிழ்
Trailer from 1-1-2021 @ 5 PM.
⭐ing #SreejaVijaysethupathi @ReginaCassandra @VijaySethuOffl
Directed by @karthik_films@DoPsathya @revaamusic @R_Govindaraj @proyuvraaj pic.twitter.com/TAicqCkV49
— VijaySethupathi (@VijaySethuOffl) December 30, 2020
ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் இந்த திரைப்படத்திற்கு ‘முகிழ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்தப் படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தப் படத்தில் நடிகை ரெஜினாவும், நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் . இந்த படத்தை கார்த்திக் இயக்குகிறார் . பெண் இசையமைப்பாளர் ரிவா இசையில் ,சத்யா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது . விஜய் சேதுபதியின் நிறுவனம் தயாரிக்கும் ஒரு மணி நேர வெப் திரைப்படம் ஒரு புதிய முயற்சியாக கருதப்படுகிறது .