இந்த ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இவர் படங்களில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்விலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து பலருக்கு ஹீரோவாகியுள்ளார் . இவர் ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியுள்ளார். மேலும் மறைந்த நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றுள்ளார் .
இப்படி பல உதவிகள் செய்துள்ள இவருக்கு தமிழக பாரம்பரிய விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நம்மாழ்வார் விருது வழங்க முடிவு செய்துள்ளது . இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கு இந்த ஆண்டு தேர்வாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . இதனால் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .