தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தூக்கு மேடை வரை செல்ல தயார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் முரசொலி மூல பத்திரம் எங்கே என்ற கேள்விக்கு திமுகவினர் சரியான பதில் சொல்லாமல் என் மீது அவதூறு வழக்கு தொடுக்கின்றனர் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தூக்கு மேடை வரை செல்ல நான் தயாராக உள்ளேன். அர்ஜுனா மூர்த்தியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம் என்று அவர் பதிலளித்தார்.