Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஆஜித் குடும்பம்..‌. வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இன்று வெளியான முதல் புரோமோவில் கேபி அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார் . தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் ஆஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

அவர்களைப் பார்த்ததும் கண்ணீர்விட்டு கட்டியணைக்கிறார் ஆஜித். இதன்பின் ஆஜித் குடும்பத்தினர் அனைவருடன் அமர்ந்து பேசுகையில் செல்லமாக ஆஜித்தை கண்டிக்கின்றனர் . ஆஜித் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் அதை அவருக்கு யாரும் தெளிவாக புரிய வைக்க வில்லை என கூறுகின்றனர். இதற்கு பதிலளித்த ஆரி ,’என் வாயை தான் அடைச்சுடாங்களே .அட்வைஸ் என சொல்லி அவன் கிட்ட பேசி வாங்கிக் கட்டிக்கொண்டேன்’ என்கிறார்.

Categories

Tech |