பிக்பாஸ் அனிதா தனது தந்தை மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அனிதாவின் தந்தை மரணமடைந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார் . அதில் ‘அப்பாவை கடைசியா இப்படி தான் பார்த்தேன் . பிக்பாஸ் குவாரண்டைன் போகும் போது எடுத்தது . அப்பான்னா எனக்கு உயிர் . எங்க எங்கயோ டூர் கூட்டிட்டுப் போகணும்னு ஆசையாக ஓடிவந்தே. எனக்கு முன்னாடியே நீ கிளம்பி போய் இருக்க கூடாது டாடி .
ஒருநாள் பொறுத்திருந்தால் நான் உன் கூட வந்துருப்பேன் . உன்ன வழியிலேயே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இருப்பேன் . நீ இன்னும் பத்து வருஷமாவது என்கூட இருந்திருப்ப . சாரி டாடி என்னால உன்னை காப்பாத்த முடியல வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி என்னை விட்டு போகாது. எங்க போன ராசா’ என பதிவிட்டுள்ளார் . இதன்பின் குறிப்பாக ‘இதை என் ஃபாலோயர்ஸ் கிட்டதான் எக்ஸ்பிரஸ் பண்றேன் .இதையும் வீடியோ பண்ணி தப்பா டைட்டில் போட்டு என் சோகத்தில் காசு பார்க்காதீங்க ப்ளீஸ் என் வலியை உணர்ந்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார் .