Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.

அதன் மூலம் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டணத்தைச் செலுத்துவதற்கான நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நேரத்துடன் எரிபொருள் செலவும் சேமிக்கப்படுகிறது. நான்கு வங்கிகளின் உதவியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஸ்டேக் அறிமுகமானது. அதன்பிறகு 2017ம் ஆண்டு 7 லட்சம் பாஸ்டேக் வழங்கப்பட்டன. அதனையடுத்து 2018ஆம் ஆண்டு 34 லட்சமாக அதிகரித்தது. தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் பயணிக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |