இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான கர்னல் நரேந்திர புல் குமார் இன்று காலமானார்.
இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களின் ஒருவரும், மலையேற்ற வீரருமான கர்னல் நரேந்திர புல் குமார் (87) டெல்லியில் காலமானார். அவர் 1965-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அளவிட்ட இந்திய குழுவில் இடம்பெற்றவர். சியாச்சின் பனிமலை முழுவதையும் பாகிஸ்தான் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தபோது தனது குழுவினருடன் அதிரடியாக இமயத்தின் ஏழு மலைகளை கடந்து சென்று பாதுகாத்த பெருமை அவரையே சேரும்.
இளைஞர்களுக்கு என்றும் உத்வேகமாக விளங்கும் அன்னாருக்கு வீரவணக்கம். அவரின் மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.