Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அத்ரங்கிரே’ பட இயக்குனருக்கு கொரோனா… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

‘அத்ரங்கிரே ‘ பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அத்ரங்கிரே . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது. கொரோனா ஊரங்கிற்க்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது . சமீபத்தில் டெல்லியில் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் அருகே படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது .

இந்நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது . எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை . நான் நலமாக இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன் . அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு அரசாங்க விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . ஆதரவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |