ஈரோட்டில் 10ம் வகுப்பு சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(23). அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி விவாகரத்து பெற்று இவரிடமிருந்து சென்று விட்டார். அதன்பின் லோகேஷ் தனியாக வசித்து வந்துள்ளார்.
அவருடைய உறவினரின் வகையில் தங்கை முறையான 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் லோகேஷ் பழகி வந்துள்ளார். லோகேஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, சென்ற மாதம் கடத்திச் சென்றுள்ளார். அதன்பின் சிறுமியின் பெற்றோர்கள் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். போலீசார் புகாரின் பேரில் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் லோகேசும், சிறுமியும் ஈரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அதனை பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின் கடத்தப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது, லோகேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து பின்பு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் கைது செய்தனர். அதன்பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் போட்டனர்.