Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன்கள்… இது இருக்கானு உடனே செக் பண்ணுங்க… வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலையுடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் டோக்கனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்களின் படங்கள், அதிமுக கட்சியின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொங்கல் பரிசுத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக, அதிமுக சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி டோக்கன்கள் அனைத்தும் ஆளும் கட்சியினர் மூலமாக வழங்கப்பட்டு வருவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இது போய் சேராது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆர் திமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கட்சியினர் ஆர்வமிகுதியால் அவ்வாறு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் பொங்கல் பரிசு கான அதிகாரபூர்வ கண்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என ரேஷன் கடைகளுக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களை தவிர வேறு எந்த டோக்கனுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் சுற்றறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |