Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்…. விபத்தில் சிக்கி…. உயிர் தப்பினார்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கார் விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மூன்று பேருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பக்கத்திலிருந்த ஹோட்டல் மீது மோதி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில்அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் எந்த காயங்களும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஆனால் உணவுக் கடை ஊழியர் ஒருவருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசாருதீன் உட்பட 4 பேரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |