Categories
உலக செய்திகள்

5 மாதங்களுக்கு முன்…. மாயமான இளம்பெண்…. அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமாகி 5 மாதங்கள் கடந்தும் அவரை பற்றிய விபரம் தெரியாமல் உள்ளது. 

கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஆனால் தற்போது அவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளது. தற்போது இந்த பெண் குறித்த தொடர்புடைய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது hailey bebedict என்ற 28 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காணாமல்போயுள்ளார்.

இந்த பெண்  Dundas buthurstenr என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன் பின்பு காணாமல் போயுள்ளார். மேலும் காணாமல் போன இந்த பெண் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர். அவர் காணாமல் போய் 5 மாதங்கள் கடந்ததால் அவரின் பாதுகாப்பு குறித்த கவலை காவல்துறையிருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |