Categories
உலக செய்திகள்

உலகிலே முதன்முறையாக…. இந்த நாட்டில்…. “புத்தாண்டு” பிறந்து விட்டது…!!

உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்து நாட்டில் புதிய வருடம் பிறந்துள்ளது.

உலகம் முழுவதும் புதுவருடப் பிறப்பை வரவேற்க மக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் தற்போது 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி 2021 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். மேலும் புத்தாண்டை அந்நாட்டு மக்கள் கலர்கலராக வானவெடி வெடித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி புத்தாண்டை சிறப்பாக வரவேற்றுள்ளனர்.

2020ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் டுவிட்டரில் இந்த விஷயம்தான் டிரெண்டிங்கில் உள்ளது. பெரும்பாலும் #goodbye, #lastdayof2020, #happynewyear 2021, #happy2021 என்ற ஹாஷ்டேக்குகள் தேசிய அளவில் தற்போது டிரெண்டில் இருக்கின்றன.

Categories

Tech |