Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் தழுவினாலும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாக்களித்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் , எல்லா நாடாளுமன்ற தேர்தலை போல இந்த தேர்தலிலும் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்காக ரேபரேலி தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி வரும் நாட்கள் மிகவும் சோதனையான காலகட்டம். ஆனால் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் வருகின்ற சோதனையை வெல்ல முடியும்.நாட்டின் நலன்களையும் , காங்கிரசில் கட்சியில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய பண்புகளை பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன். நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து, உங்களிடம் இருந்துதான் எனக்கு சக்தி கிடைக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |