தமிழகத்தின் கைரேகையை மாற்றி விடுவேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3வது கட்ட பிரசாரத்தை முடித்தார்.அதில் பேசிய அவர், எனக்கு கூட்டம் புதிதல்ல, உங்கள் தயவால் புகழும் புதிதல்ல. உங்களின் தயவால் ஐந்து வயதிலிருந்தே புகழை அனுபவித்து வருகிறேன்.
மேலும் உங்கள் ஆசி இருந்தால் தமிழ்நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன்.எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான். உங்கள் அன்பை நான் புரிந்துகொள்கிறேன், அதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவரும் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு போட வேண்டும். நிறைய பேசவேண்டும் என்று இருக்கிறது ஆனால் செயலில் இறங்கி காட்டுவோம். நேர்மையை போற்றுங்கள், உங்கள் நாட்டை மாற்றுங்கள். குறிப்பாக தமிழ்நாட்டை மாற்றங்கள்.
இல்லத்தரசிகளுக்கான திட்டம், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் வருங்காலங்களில் கொண்டுவரப்படும். அருப்புக்கோட்டை தொகுதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுத்த தொகுதியாகும். ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவராக பார்த்து தேர்வு செய்யுங்கள். நாளை நமதே. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், என்று கூறினார்.