Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிறந்த குழந்தைக்கு நடிகரின் பெயரை வைத்த தாய்… என்ன காரணம் தெரியுமா ?…!!!

தன் குழந்தைக்கு உதவி செய்த நடிகரின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்துள்ளார் அவரது தாயார்.

சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தாயார் தனக்குப் பிறந்த குழந்தை மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் அதனால் உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பிரபல நடிகர் சோனு சூட் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவருடன் தான் தொடர்பில் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் . குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பதிலளித்துள்ளார் . இந்நிலையில் அந்த குழந்தை தற்போது நல்ல நிலைமையுடன் உள்ளது .

இந்த உதவிக்கு அந்த குழந்தையின் தாயார் நடிகர் சோனு சூட் நன்றி தெரிவித்ததோடு குழந்தைக்கு ‘சோனு’ என்ற பெயர் வைத்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் நடிகர் சோனு சூட் மீது உண்மையில் மிகுந்த மதிப்பும் ,மரியாதையும் வைத்திருப்பதாகவும் அவருடைய உதவிக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சோனுசூட் கொரோனா ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளார் . அவர் செய்த ஏராளமான உதவியால் தெலுங்கானா மாநிலத்தில் அவருக்கு கிராம மக்கள் கோவில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

Categories

Tech |