Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் சிக்கிய ட்ரோன்…”சீனாவின் சதி திட்டமா”..?

மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது இந்த நீர்மூழ்கி தோன்றியதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். அதை இந்தோனேசிய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ட்ரோன் 7.4 அடி நீளம் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. இதில் சென்சார் பொருத்தப்பட்டு உள்ளதால் இது போன்ற ட்ரோன்கள் இந்தோனேசியாவில் கிடைப்பது முதன் முறை அல்ல.

ஏற்கனவே மாசலேம்பு தீவுகள், ரியாவு தீவுகளில் நீர்மூழ்கி ட்ரோன்கள் சிக்கியுள்ளன. இந்திய பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை பதிவு செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் இந்திய கடற்படை ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சீனர்கள் வேவு பார்க்க இதனை அனுப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Categories

Tech |